"இந்தியாவின் சட்டங்களுக்கு உட்பட்டு, புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்கத் தயார்" -கூகுள் அறிவிப்பு
இந்தியாவின் சட்டங்களுக்கு உட்பட்டு, புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்றுக் கொள்ள உள்ளதாக கூகுள் நிறுவம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய விதிகளை ஏற்பதற்கான கெடு முடிவடையும் நிலையில், இந்தியாவின் சட்டமியற்றும் நடவடிக்கைகளை தாங்கள் மதிப்பதாக கூகுள் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்தியாவின் சட்டங்களை மீறும் வகையாலான உள்ளடக்கங்களை நீக்கிய நீண்ட வரலாறு கூகுளுக்கு உண்டு என அவர் கூறினார். டிஜட்டல் தளங்களுக்கான புதிய விதிகளை கடந்த பிப்ரவரியில் மத்திய அரசு அறிவித்து அதை அமல்படுத்த 3 மாத கால அவகாசம் வழங்கியது.
அவகாசம் முடிய சில மணி நேரங்களே பாக்கி இருந்த நிலையில் கிரிமினல் நடவடிக்கைகளை தவிர்க்கும் நோக்கில் அவற்றை ஏற்றுக் கொள்வதாக கூகுள் அறிவித்துள்ளது.
Comments